#### Appleஇன் ஓராண்டு வரம்பிற்குட்பட்ட உத்தரவாதம் குறித்த சுருக்கவிவரம் ரீடெயிலில் வாங்கிய தேதியிலிருந்து ஓர் ஆண்டு வரை, உள்ளடங்கிய வன்பொருள் தயாரிப்பு மற்றும் ஆக்சஸரிகளின் பொருட்களிலும் வேலைத்திறனிலும் பாதிப்புகள் இருக்காது என Apple உத்தரவாதம் அளிக்கிறது. சாதாரணத் தேய்மானம் மற்றும் பழுதுகள், விபத்து அல்லது தவறான பயன்பாட்டினால் ஏற்படும் சேதங்களுக்கு Apple உத்தரவாதம் அளிக்காது. சேவையைப் பெற, Appleஐ அழையுங்கள் அல்லது Apple Store அல்லது Apple அங்கீகரித்த சேவை வழங்குநரைத் தொடர்பு கொள்ளுங்கள். கிடைக்கும் பழுதுபார்ப்புச் சேவைகள் கோரப்படும் நாட்டைப் பொறுத்து மாறுபடலாம், விற்பனை செய்யப்பட்ட நாட்டில் மட்டுமே கிடைக்கும் வகையில் கட்டுப்படுத்தப்படலாம். இருப்பிடத்தைப் பொறுத்து அழைப்புக் கட்டணங்கள், சர்வதேச ஷிப்பிங் கட்டணங்கள் பொருந்தக்கூடும். [apple.com/legal/warranty](https://www.apple.com/legal/warranty/) மற்றும் [support.apple.com](https://support.apple.com) இணையதளத்தில் உள்ள சேவையைப் பெறுவது தொடர்பான முழு விதிமுறைகள் மற்றும் விரிவான தகவல்களுக்கு உட்பட்டதாகும். இந்த உத்தரவாதத்தின் கீழ் நீங்கள் செல்லுபடியாகும் கோரிக்கையைச் சமர்ப்பித்தால், Apple தனது சுய விருப்பத்தின்படி உங்கள் வன்பொருள் சாதனத்தைப் பழுதுபார்க்கலாம், மாற்றித் தரலாம் அல்லது ரீஃபண்டு வழங்கலாம். உத்தரவாதப் பலன்கள் என்பவை உள்ளூர் நுகர்வோர்ச் சட்டங்களின் கீழ் கிடைக்கும் உரிமைகளுடன் சேர்த்து கூடுதலாக வழங்கப்படுபவை ஆகும். உத்தரவாதத்தின் கீழ் கோரிக்கையைச் சமர்ப்பிக்கும்போது வாங்கியதற்கான ஆதாரத்தையும் நீங்கள் சமர்ப்பிக்க வேண்டியிருக்கலாம். 011626-1 WAR-TM